மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 […]
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களாகவே பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும், ப்ளூ வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். அதன்படி, வரும் […]
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மேலும்,இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க , அரசுப் பள்ளி மாணவியர், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் […]
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள்: அந்த வகையில்,இதுவரை 24 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.அதன்படி,இதுவரை 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.முதல் தவணை தடுப்பூசி போடாமல் 46 லட்சத்து 67 ஆயிரத்து 999 […]
இன்று தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் […]
நாளை தமிழகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசு,அதனை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனினும்,கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது.இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,அந்த வைரஸிற்கு […]
நாளை முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக,ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு. ஒமைக்ரான் தடுப்பு […]
மதுரை:கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,முன்னதாக ஞாயிற்றுக்கிழமையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,மக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கினர். குறிப்பாக,ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும்,தடுப்பூசி […]
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது.இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,அந்த வைரஸிற்கு […]
தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி 9 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று 50,000 இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல்,மாலை 7 மணி வரை நடைபெற்றது.குறிப்பாக,சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில்,தமிழகம் […]
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாமில், பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டதால் 3 பேருக்கு வாந்தி மயக்கம். சிவகங்கை : இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அங்கு பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவை உட்கொண்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்த சம்பவம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் […]
தமிழகம் முழுவதும் 6000 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 6,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெறுகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இதனையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது: “சென்னையில் இன்று […]
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் போன்றவை குழுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் […]
தமிழக மக்களை கொன்ற தொற்றிலிருந்து பாதுகாக்க பணியாற்றி வருகிறோம் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட வேண்டாம். தமிழகம் முழுவதும் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை நான்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு […]
வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் […]
அக்.3-ஆம் தேதி 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 3 முறை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனையடுத்து, 4வது முறையாக அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். […]
சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் நிலையில், சென்னையில் மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் […]