கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை பயணம் செய்த விமானத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் முதலமைச்சர் பதவியிலிருந்து பினராயி விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதனை கேரளா இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.சபரிநாதன் சமூக வலைதளங்களில் 3 வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் இருவர் விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும், முதலமைச்சருடன் வந்த ஒரு நபர் அவர்களைத் தள்ளிவிடுவதையும் இந்த வீடியோவில் காணமுடிகிறது.
unknown node