கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது வழங்ப்பட்டது . இந்த நிகழ்வு குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். வைக்கம் 100 : கேரளா மாநிலம் கோட்டையத்தில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை […]
கோட்டயம் : இன்று கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில மூத்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” வைக்கம் நூற்றாண்டு விழா கேரளா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே போல, புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவாக விழாவுக்கும் எங்களுடைய அழைப்பை ஏற்று […]
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவின் முதல் பகுதியாக, தமிழக அரசு நிதி உதவியால் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர். அதன்பிறகு, வைக்கம் […]
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மகாதேவர் கோயில் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பெரியார் நினைவாக அமைக்கப்பட்ட நினைவகம், தமிழக […]
சென்னை : தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது பெறுபவரின் விவரத்தை தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி […]
வைக்கம்: கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்க உள்ளனர். 1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்று […]
கேரளா : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (டிசம்பர் 12) நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11) கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து […]
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நான் நெய்தல் படை அமைப்பேன் என நான் கூறினால் சிரிக்கிறார்கள். நான் கூறியதை போல தானே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் நெய்தல் படை ஆரம்பித்துள்ளார். அப்போ, பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியது தானே. கடலில் என் மக்களை என் நாட்டு ராணுவம் காப்பாற்றவில்லை. அப்படி […]
திருவனந்தபுரம் : நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற […]
திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த உறவுகளை இழந்து, வீடு உடைமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை […]
வயநாடு : கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வருகை : இன்னும் பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினர் , இந்திய ராணுவம் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு […]
வயநாடு : வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி நிலவரங்கள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அடுத்ததாக, வயநாட்டில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று நிலச்சரிவு பற்றி ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், வயாநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலரும் […]
வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள், இறப்பு விவரங்கள் ஆகியவற்றை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில் , நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது வரலாறு காணாத மற்றும் வேதனையளிக்கும் பேரழிவு ஆகும். இதுவரை 144 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் பாதிப்புகள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணியில் மத்திய மாநில மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினர், தமிழக மீட்புப்படை மற்றும் தீயணைப்புத்துறையினர் என பலரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் […]
சென்னை : கனமழை காரணமாக கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணி […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில், முண்டைக்கை பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 மணி அளவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதிக்கு செல்ல கூடிய பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சூரல்மலை பகுதியில் தான் சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்றும், அங்கு […]
கேரளா: விழிஞ்சம் துறைமுகத்தில் 2,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 2028-29இல் 5,500 வேலைவாய்ப்புகளாக இது உயரும் என்றும் கரண் அதானி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக் கடலோரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது விழஞ்சம் துறைமுகம். விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மொத்தம் 8,867 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது . கேரள மாநில அரசு சார்பில் 5,595 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 818 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது-தனியார் கூட்டாண்மையில் இந்த விழிஞ்சம் துறைமுகம் […]
கேரளா: இந்த கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக ராஜஸ்தான், குஜராத் , பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நீட் முறைகேடு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். நீட் […]
கேரளா: மத்திய அரசு பதிவேடு உள்ளிட்ட அனைத்து அரசு பதிவேடுகளிலும் கேரள மாநிலத்தின் பெயர் கேரளா (Kerala) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி மலையாள சொல் வரும்படியாக கேரளம் (Keralam) என மாற்ற அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இதே கேரளா மாநில சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார். பின்னர் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி […]
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளாவில் […]