தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் – தலைமை தேர்தல் அதிகாரி

The election official said that arrangements are being made for the assembly class in Tamil Nadu.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாதியபிரதா சாகு,  தமிழகத்தில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளில் 1,55,102 மின்னணு இயந்திரத்துடன் 1,20,807 விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு இயந்தரங்களின் எண்ணிக்கை 1,14,205 ஆக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.