பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் – துணை முதல்வர் வாழ்த்து...

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று  கொண்டாடி வருகிறார். இதனையடுத்து  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று  கொண்டாடி வருகிறார். இதனையடுத்து  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு அற்புதமான ஆண்டிற்கான, இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளுக்கான எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் தேசத்திற்கு சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் இறைவன் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node

இதேபோல்,  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ.நரேந்திர மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாரும் எட்டமுடியாத உயரத்துக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்வதற்கான அவரது இலக்கில், அவருக்கு நல்ல ஆரோக்கியமும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று ஆங்கிலத்தில்  பதிவிட்டுள்ளார்.

unknown node