#BREAKING: திமுக-காங்கிரஸ் இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை..!

The 2nd phase of block allocation talks between DMK and Congress will be held this evening.

திமுக-காங்கிரஸ் இடையே இன்று 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை அவசர அவசரமாக திமுக பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைத்துள்ளது.

காங்கிரஸ் 30 தொகுதிகளை கேட்கும் நிலையில்,  21 தொகுதிகளை ஒதுக்க திமுக  முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.