சமூக இடைவெளியை மீறினால் ரூ.500 அபராதம் – முதன்மை செயலாளர்

Those working at the Chennai General Secretariat have announced a fine of Rs 200 for not wearing a mask.

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.200 பராதம் விதிக்கப்படும் என முதன்மை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.