முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு இ.பி.எஸ். இரங்கல்..!

Opposition leader EPS mourns the death of former MP Tulasi Ayya Vandayar Expressed condolences

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.துளசி அய்யா மறைவிற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார்(93 வயது),வயது முதிர்வு காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இறுதிச் சடங்குகள் பூண்டியில் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,முன்னாள் எம்.பி துளசி அய்யா மறைவிற்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் எம்.பி துளசி அய்யா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கல்வி வள்ளலாகவும், டெல்டா மக்களின் பேரன்பை பெற்றவருமாக திகழ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு.பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”,என்று கூறி பதிவிட்டிருந்தார்.

unknown nodeunknown node