நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாய் நினைவிடம் திறப்பு -ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Opening of the memorial as an example of gratitude - O. Panneerselvam speech

மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற குரல் இங்கே கேட்டுக்கொண்டிருக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீது தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் போது அனைவருக்கும் வீரம் பிறக்கும். மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற குரல் இங்கே கேட்டுக்கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.