அதிமுகவில் இருந்து ஒருவர் நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

Announcement of the removal of one person from the AIADMK by the party's coordinator O. Panneerselvam and co-coordinator Edappadi Palanisamy.

அதிமுகவில் இருந்து ஒருவரை நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக குறிக்கோளுக்கு, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலும், அரியலூர் மாவட்ட தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ப.தியாகராஜன்(மண்ணுழி இந்திரா நகர் கிளை கழக செயலாளர்) இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவித்துள்ளனர்.

unknown node