பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏகளுடன் புதிய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனை!!

Navjot Singh Sidhu, the new leader of the Congress party in Punjab, consults with party MLAs in Amritsar.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸில் கட்சி எம்எல்ஏகளுடன் ஆலோசனை.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸில் கட்சி எம்எல்ஏகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மோதல் நீடித்து வரும் நிலையில் , தனது இல்லத்தில் நவ்ஜோத்சிங் சித்து எம்எல்ஏகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே, முதல்வர் அமரிந்தர் சிங்கின் கடும் எதிர்ப்பையும் தாண்டி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி மேலிடம் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமித்திருந்தது. அவருடன் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர். இதனால் இருவர் இடையே மோதல் நீடித்து வந்தது. இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் நவ்ஜோத் சிங் சித்து புதிய தலைவராக நியமித்தது என்பது குறிப்பிடப்படுகிறது.