பிரதமராக இருந்தபோது நேருவுக்கும் திராவிடம் தேவைப்பட்டது – ஆ.ராசா

"I needed Nehru when he was the Prime Minister," A. Rasa said at the launch of the book.

பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் தேவைப்பட்டது என்று புத்தகம் வெளிடியிட்டு விழாவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுதிய நேரு சிந்தனை இலக்கும், ஏளனமும் என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, திமுக இன்றைக்கு நேருவை பாராட்டுவது அல்ல, எங்களுடைய நோக்கம் நாங்கள் மாறவில்லை, இருந்த இடத்தில் தான் இருக்கிறோம். நேருவும் மாறவில்லை.

ஆனால், நேருவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாக பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு இந்துத்துவமாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை விட இந்த தேசத்தை இந்து தேசமாக ஆக்குகின்ற முயற்சியில் அன்றைக்கு ஈடுபட்டார்கள் என்பதை கால வரிசையில் சொல்லும்போது, பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் அன்று தேவைப்பட்டது என்பதை சொல்வதற்காக தான் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.