முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நீட் தேர்வு வைங்க...! பார்த்து எழுதியாவது ஸ்டாலின் பாஸ் ஆகுவாரா? – சீமான்

சமூகம், பொருளியல், அறிவியல், புவியியல், வரலாறு, வேளாண்மை, இலக்கியம் போன்றவற்றை ஒரு பாடமாக கொண்டு வந்து, தேர்வு வையுங்கள், அப்போது தான் அமைச்சராக முடியும்

சமூகம், பொருளியல், அறிவியல், புவியியல், வரலாறு, வேளாண்மை, இலக்கியம் போன்றவற்றை ஒரு பாடமாக கொண்டு வந்து, தேர்வு வையுங்கள், அப்போது தான் அமைச்சராக முடியும் என்று சொல்லுங்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்யூறு தொகுதி வேட்பாளர் ராஜேஷை ஆதாரித்து, செய்யூறு பஜார் வீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மருத்துவர், ஆசிரியர், IAS, IPS என அனைவருக்கும் தேர்வு வைக்கிறீர்கள். நாட்டை ஆள்பவர்களுக்கும் தேர்வு வையுங்கள்.

அவ்வாறு, நாட்டை ஆள்வர்களுக்கும் நீட் தேர்வை வையுங்கள். அப்போது தான்  ஆள்பவர்களின் தகுதி தெரியும். சமூகம், பொருளியல், அறிவியல், புவியியல், வரலாறு, வேளாண்மை, இலக்கியம் போன்றவற்றை ஒரு பாடமாக கொண்டு வந்து, தேர்வு வையுங்கள், அப்போது தான் அமைச்சராக முடியும் என்று சொல்லுங்கள். எடப்பாடி, மோடி, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி எழுதுவாரா? இல்ல பார்த்து எழுதியாவது ஸ்டாலின் பாஸ் ஆகுவாரா? என விமர்சித்துள்ளார்.