புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
unknown nodeதனது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று பதிவிட்டார் .மோசமான ஆட்சி,ஊழல் உள்ளிட்டவையால் முக்கிய நகரமான சென்னை வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. குறிப்பாக மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட முக்கிய காரணம் என்று பதிவிட்டார்.
unknown nodeஇந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்கள் மீதான கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற்று அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.