அமைச்சர் துரைக்கண்ணு மறைவு – தலைவர்கள் இரங்கல்

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று  இரவு காலமானார்.எனவே அமைச்சரின் மறைவிற்கு

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று  இரவு காலமானார்.எனவே அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,பாமக நிறுவனர் ராமதாஸ் ,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்  :

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

unknown node

பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் :

ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர். கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம் அருகே மகிழுந்தில் சென்ற போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர், உடனடியாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் :

வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.

பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் :

தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு  மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.

unknown node