தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.எனவே அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,பாமக நிறுவனர் ராமதாஸ் ,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! […]
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது. தமிழக வேளாண்த்துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர் காக்கும் […]