தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅவரது பதிவில்,திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன்.பேராசிரியர் என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்தார். அவரது அறிவாற்றல், தாம் கொண்ட கொள்கையின் மீதான தீராத பற்று, மக்கள் நலனுக்கென அவரது உழைத்த அவரது உறுதி போன்ற குணங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.