வெங்கையா நாயுடு முதல் விஜயகாந்த் வரை பத்ம விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ ..!

Vijayakanth

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுபவர்களை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில்  132 பெயர்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள், மேலும் பட்டியலில் வெளிநாட்டு குடியுரிமை இல்லாத இந்தியர் (என்ஆர்ஐ), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் (பிஐஓ), இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமை … Read more

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு.!

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு வும் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. … Read more

எம்பி சுரேஷ் கோபியின் தாடி குறித்து வெங்கையா நாயுடு கேட்ட கேள்வி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவையில்  தீவிரமான நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடிகராகவும், எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் தாடி குறித்து கேள்வி எழுப்பி ஒரு நிமிடம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த பாஜக எம்பி சுரேஷ் கோபி தனது உரையை முன்வைக்க எழுந்து நின்றபோது, அவைத் தலைவரான நாயுடு, நடிகரின்  தாடியைக் கண்டு உண்மையிலேயே ஆச்சரியப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர் ஹிந்தியில் கேட்டார்: “இது முகமூடியா அல்லது தாடியா?” என்ற வினவல் சபையில் பலத்த சிரிப்பை வரவழைத்தது,மேலும் … Read more

#Breaking:இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று … Read more

#Breaking:மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் – மாநிலங்களவை ஒத்திவைப்பு…!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில்,நேற்று மக்களவையில் ஓபிசி மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது,மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.விவசாயிகள் பிரச்சனை … Read more

#BREAKING: மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு எச்சரிக்கை..!

எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார். இன்று மாநிலங்களவை கூடியதும் பெகாசஸ் விவகாரத்திலே உடனடியாக விவாதம்தேவை, விலைவாசி உயர்வு குறித்து விவாதம்தேவை, வேளாண்சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சி எம்பிக்கள் அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அவை தலைவர் வெங்கையா நாயுடு,  அவையில் விசில் அடிப்பது, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்த புகார்கள் … Read more

சென்னைக்கு வருகை புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழக தலைநகரமான சென்னைக்கு வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.  இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி யில் நடைபெறவிருக்கும் விழாவில் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள புத்தக … Read more

துணை குடியரசுத்தலைவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறார்.!

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, இவரது உடல்நிலை குறித்து துணை ஜனாதிபதி செயலக ட்வீட்டர் பக்கத்தில், வெங்கையா நாயுடு உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதியானதிலிருந்து வீட்டு தனிமைப்படுத்தலின் போது மருத்துவர்கள் அறிவுரையின்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதனால், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா..!

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பதாக துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயேதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் – குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிதி இரானியுடன் பேசும் போது மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் அனில் சதுர்வேதி குடியரசு துணைத் தலைவரை சந்தித்து, கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள, பண்ணைகள் மற்றும் பால்வளத் தொழில்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைத்தார். பண்ணைத் துறையில் தொழில்முனைதலை அரசு ஊக்குவித்து வருவதாகவும், ஊக்கத்தொகை மற்றும் கொள்கை … Read more