தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். pic.twitter.com/W07vSUvp8b — Vice President of India (@VPSecretariat) March […]
துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த ஆவணப்படுத்தும் வகையில் “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பேசுகையில்,அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும்,பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. […]
தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று நாட்டின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியானது உலக மொழிகளில் பழமையான மொழியாக தொன்று தொட்டு விளங்குவதாவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அனைவரும் அவர்களது தாய் மொழியை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அதே போல், தேவையில்லாமல் எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் எந்த மொழியையும் எதிர்க்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி” எனஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபின் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுவரையில் இந்தியாவில் துணை குடியரசு தலைவர்கள் யாரும் இப்படி ஒரு தனிப்பட்ட மதத்தினை பற்றி பேசியதே கிடையாது.இப்போதுதான் முதல் முறையாக வெங்கையா நாயுடு பேசியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இது கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.