மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.!

makkal neethi maiam in Chennai has started interviewing those who have applied to contest on behalf of the party.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் பழ.கருப்பையா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். இதனிடையே, திமுகாவிலிருந்து பிரிந்த ஐஜேகே கட்சியும், அதிமுகவிலிருந்து பிரிந்த சமத்துவ மக்கள் கட்சியும் கமல்ஹாசனை தங்கள் கூட்டணி கட்சியில் இணைக்க முடிவெடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில், 3வது அணியாக மநீம, சமக, ஐஜேகே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.!