மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் (SEET) தேர்வு நடத்தப்படும் என கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று கோவையில் பிற்பகல் 12 மணிக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதற்கு முன்னதாக மக்காள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை […]
விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கவுரவமாக நடத்தி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதிமுக சார்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது, திமுக எத்தனை தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளது என்ற கேள்விக்கு, அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது என்று வைகோ பதிலளித்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுப்பது இல்லை […]
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் பழ.கருப்பையா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். இதனிடையே, திமுகாவிலிருந்து பிரிந்த ஐஜேகே கட்சியும், அதிமுகவிலிருந்து பிரிந்த சமத்துவ மக்கள் கட்சியும் கமல்ஹாசனை தங்கள் கூட்டணி கட்சியில் இணைக்க முடிவெடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. கமல்ஹாசன் […]
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களே சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டிற்கு ரூ.15,000, புதுச்சேரிக்கு ரூ.5000, கேரளாவிற்கு ரூ.2000 கட்டணத் தொகை என்றும் […]
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியாபவனிசங்கர் என பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நேற்று ஒரு பேட்டியில் பிரியா பவானிசங்கர் இந்தியன் 2விற்காக நடந்த ஆடிசனை பற்றி கூறினார். அதில், ‘ நான் ஷங்கர் சார் ஆபிஸிற்கு சென்றேன். அங்கு 2 மணி நேரம் […]