கே.பி.அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.!

AIADMK Higher Education Minister KP Anpalagan has filed his nomination papers to contest the elections.

அதிமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கேபி அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார். பாலக்கோடு தொகுதியில் 5வது முறையாக அதிமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பித்தக்கது.