காசி : கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர்!

Prime Minister Modi has lunch with construction workers in Kashi.

காசியில் கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உணவருந்தியுள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். தற்பொழுதும்காசி விஸ்வநாத் தாழ்வாரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்களுடன் இணைந்து உணவருந்தியுள்ளார்.