வாரணாசி: பிரதமர் மோடி உத்திர பிரதேசம் மாநிலத்திற்கு நேற்று வந்திருந்த போது அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 18 2024) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பிஎம் கிசான் சமேலான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி எழுதும் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பின்னர் சாலை […]
காரைக்கால் : தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டார். தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஆதீன கர்த்தரின் முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 4 மாதமாக தேடப்பட்டு வந்த செந்தில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்தது […]
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் 3வதுமுறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்த உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் இந்த முறை மீண்டும் போட்டியிட உள்ளார் என பாஜக தலைமை முன்னதாக அறிவித்து இருந்தது. இதனை அடுத்து இன்று வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று வாராணசிக்கு வருகை […]
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பிரதமர், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் போது, விவசாயிகள் முன்னிலையில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 36 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கிறார். அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார். இன்று திறந்து வைக்கப்படும் திட்டங்களில் அமுலின் பனாஸ் பால் பண்ணை முக்கியமானது. பனாஸ் பால் ஆலை திறப்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் கார்க்கியான்வில் […]
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் […]
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் (BHU) தனது ஆண் நண்பருடன் நடந்து சென்ற, ஐஐடி மாணவியை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளனர். அந்த பெண்ணின் ஆடையையும் கழற்றி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அளவில் நடந்த இந்த சம்பவத்தையடுத்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிறுவன இயக்குநர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர் செய்ய வேண்டும் என்று […]
இந்தியாவை ஜெயா என்ற தெரு நாய் நெதர்லாந்தை சேர்ந்த தனது புதிய உரிமையாளருடன் முறையான விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளது. ஆம், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சுற்றித்திரிந்த தெரு நாயை தத்தெடுத்து அதற்கு முறையான பாஸ்போர்ட் விசா எடுத்து, நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சி சம்பவம் இந்தியர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம் சேர்ந்த மெரல் பொன்டென்பெல் என்ற வெளிநாட்டு பெண்மணி, சுற்றுலாவுக்காக […]
உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை […]
காசியில் 4 ஆண்டுகள் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்கபட உள்ளது என வாரணாசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாகவி பாரதியார் இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அப்படி அவர் 1898ஆம் ஆண்டு முதல் 1902 ஆண்டு வரையில் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் காசியில் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது தான் ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். மேலும், அப்போது வாழ்ந்து வந்த பாலகங்காதர திலகர் […]
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் முறைக்கு உத்தரவிடகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை […]
வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதிப்பு. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாரணாசியில் இந்து பல்கலைக்கழகம், அருகில் உள்ள […]
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் எந்த மனுவை முதலில் விசாரிப்பது குறித்து இன்று உத்தரவு. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். அதாவது இந்து கோவிலாக இருந்த இடத்தில்தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது அவர்களது […]
உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,மசூதி வளாகத்துக்குள் கள ஆய்வு செய்தபோது சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,மசூதி நிர்வாகம் கள […]
உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெட்ரா நிலையில், காசி தொகுதி பாஜக வேட்பாளர் தோல்வி. உத்தர பிரதேச மாநிலம் மேலவை தேர்தலில் (UP MLC தேர்தல் 2022) காசி தொகுதி பாஜக வேட்பாளர் சுதாமா படேல் தோல்வியை சந்தித்துள்ளார். அங்கு சுயேட்சை வேட்பாளர் அன்னபூர்ணா சிங் 4,234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சி (SP) வேட்பாளர் உமேஷ் யாதவ் 345 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். […]
வாரணாசியில் இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். இன்றும் பிரதமர் அம்மாநில முதல்வர் மற்றும் கட்சி […]
காசியில் கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உணவருந்தியுள்ளார். பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர். இதனையடுத்து பிரதமர் கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். […]
வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். உத்தரபிரதேசம் 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள கால பைரவர் கோயிலில் ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இன்னும் சற்று நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சுமார் 339 கோடி செலவில் […]
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகிறார். பிரதமர் அலுவலகம் (PMO) படி, பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் நாளான இன்று மதியம் 12 மணிக்கு, பிரபலமான கால பைரவர் கோயிலுக்குச் செல்வார். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று, சுமார் 339 கோடி செலவில் கட்டப்பட்ட காசி விஸ்வநாத் தாமின் முதல் கட்டத்தைத் திறந்து வைப்பார் என்று […]
உத்திப்பிரதேசம் மாநிலம்,வாரணாசியில் ஏழு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,அதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில்,உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,சிசிஎம்பி என்ற நிறுவனம் வாரணாசி பகுதியில் கொரோனா பாதித்த 130 பேரைக் கொண்டு சில ஆய்வுகள் நடத்தியது. இந்நிலையில்,வாரணாசியில் உருமாறிய ஏழு வகை கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக […]