காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வி!

BJP candidate H. Raja, who contested from Karaikudi constituency in the Tamil Nadu Assembly elections, has lost.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக 158, அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 75,511 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.