இந்திரா காந்தி நினைவு நாள் : நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

Rahul Gandhi pays floral tributes at Indira Gandhi Memorial Day today.

இந்திரா காந்தி நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்திராகாந்தி 37 வது நினைவு தினமான இன்று, அவரது நினைவிடத்தில் இந்திரா காந்தியின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமாகிய ராகுல் காந்தி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

unknown node