இந்திரா காந்தி நினைவு நாள் : நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவது … Read more

விடுதலைப் போராட்ட வீரர் ம. பொ. சிவஞானம் நினைவு தினம் இன்று…!

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு எனும் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் எனும் இடத்தில் பிறந்தவர் தான் மா பொ சிவஞானம். இவர் சிறந்த தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மா பொ சி என அறியப்படும் இவர், சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் மற்றும் ஆளுமை காரணமாக சிலம்புச் செல்வர் எனவும் … Read more

பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாள் இன்று…!

பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் நினைவு நாள் வரலாற்றில் இன்று. 1935 ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் தான் பிரபல வயலின் இசைக் கலைஞர் வைத்தியநாதன். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞராக தான் இருந்துள்ளனர். இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வயலின் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது முதலே தந்தைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதன் பின் 1976 ஆம் … Read more

இன்று சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை நினைவுதினம்…!

இன்று சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை நினைவுதினம். மதுரை மாவட்டம் கனகவேல் காலனி பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் பிள்ளை. இவர், தொழிற்சங்கத்தில் பணியாற்றி வந்த நிலையில், 1942-ம் ஆண்டு தனது 21-ஆவது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். அவரது மனைவி மயிலம்மாள், இவருக்கு பிச்சைமணி என்ற ஒரு மகனும் 3 பேத்திகளும் உள்ளனர். இவர் தனது 93-வது வயதில் 2014-ம் ஆண்டு, ஜூலை மாதம் 8-ம் தேதி காலமானார். இவர் … Read more

வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயர் நினைவு தினம் இன்று!

சென்னை டி நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள தியாகராய நகரில் பெயருக்கு காரணமான சர்.பி.தியாகராய செட்டி நினைவு தினம் இன்று. சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்துவந்த அய்யப்ப செட்டியார் மற்றும் வள்ளி அம்மாள் தம்பதியினருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்த மூன்றாவது மகன் தான் வெள்ளுடை வேந்தர் பி தியாகராய செட்டி. இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1876 ஆம் ஆண்டு  பட்டம் பெற்றவர். இவரது மனைவி பெயர் சிந்தாமணி. இவருக்கு … Read more

நமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று!

அலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் என பன்முக தன்மை கொண்ட ஒரு சாதனை மனிதன் ஆவார். இவர்  ஸ்காட்லாந்தில், 1847-ம் ஆண்டு, மார்ச் 3-ம் தேதி பிறந்தார். இவர் இளமையில் பிரித்தானிய குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்க குடியுரிமையை பெற்றார். காதுகேளாத பெண்ணை கரம்பிடித்த பெல் இவர் தனது எட்டு வயதிலேயே நன்றாக பியானோ வாசிப்பதில் கைதேர்ந்தவர். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத கிரகாம், பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளை … Read more

இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்!

தீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுரில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி. இவர் தாயார் பெயர் பெரியாத்தா. இவர், மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளை கற்று தேர்ந்துள்ளார். இவர் 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சாலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை வெற்றி … Read more

ஏவுகணை நாயகன் மறைந்த நாள் இன்று!

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள், தமிழ்நாட்டில் உள்ள, இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா அவர்களுக்கு 5-வது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி பருவத்தில், பிரகாசமான மாணவனாக திகழ்ந்தார்.  தனது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக சிறுவயதிலேயே வேலைக்கும் சென்றுள்ளார். ஏவுகணை நாயகன் இவர் 1960-ம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின் இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக … Read more

இன்று கடைபிடிக்கப்படுகிறது மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம்…!!

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் திலகம் எம்ஜிஆரின் 31வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதிமுக தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்…

இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் – மார்ச் 14, 1883. உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் … Read more