மதுசூதனன் மறைவு செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் – சசிகலா

Sasikala mourned the news of Madhusudhanan's death through audio.

மதுசூதனன் மறைவு செய்தியறிந்து மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என்று ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்த சசிகலா.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

மதுசூதனின் மறைவிற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என்றும் அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனவும் சசிகலா ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார். மேலும், எத்தனையோ சோதனையான காலகட்டத்தில் கட்சிக்கு மதுசூதன் துணை நின்றவர் என்றும் கூறியுள்ளார்.