அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் – ஸ்டாலின்..!

Stalin told his brother to put on a mask when going to crowded places.

கூட்டமாக உள்ள இடங்களில் செல்லும்போது உங்கள் அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.

செங்கல்பட்டில் பிரச்சாரம் செய்தபோது திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா எப்பவும் வரத்தொடங்கியுள்ளது. அதனால் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் பல பேர் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்கள். நான் வேனில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொள்வேன். பேச வேண்டும் என்பதற்காக தான்  மாஸ்க் அணியவில்லை.

இனிமேல் யாரும் தயவு செய்து மாஸ்க் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசி யார் யார் போடவில்லையே தயவு செய்து அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார். நான் கூட தடுப்பூசி செலுத்தி கொண்டேன். தடுப்பூசி செலுத்தி கொண்டால் 2 நாள்கள் ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் இருக்கும்போது மாஸ்க் தேவையில்லை, ஆனால் கூட்டமாக உள்ள இடங்களில் செல்லும்போது உங்கள் அண்ணனாக சொல்கிறேன் மாஸ்க் போடுங்கள் என தெரிவித்தார்.