ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன் – சீமான் ட்வீட்

While Actor Rajinikanth said that the party could not start and come to politics, Seeman congratulated him.

கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்த நிலையில்,சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார்.மேலும் அவரது அறிக்கையில், இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். .என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை.தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த்அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.