விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

Amit Shah, BJP general secretary Kailash Vijaywarkia and state BJP leader Dilip Ghosh had lunch at a farmer's house

அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு சென்றுள்ளார். இன்று மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிருஷ்ணா மிஷன் மற்றும் சித்தேஸ்வரி காளி கோயிலுக்கு அமித் ஷா வருகை தர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மிட்னாபூரில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டில் அமித் ஷா மதிய உணவு  சாப்பிடுவார் என கூறப்பட்ட நிலையில், அமித் ஷா, பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோர் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அமித் ஷா கொல்கத்தா செல்லவுள்ளார். கொல்கத்தாவின் ராஜர்ஹாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.