திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.!

The High Court has rejected an independent candidate's request to cancel the election in tiruchuli constituency.

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சுயேட்சை வேட்பாளரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் வழங்கப்படுவதாக கூறி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் அதனை புகைப்படம் ஆதாரத்துடன் தொகுதி தேர்தல் அதிகரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்து, கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சுயேட்சை வேட்பாளரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளது. மேலும் ஆவணங்களை ஆணையத்திடம் வழங்கி மனுதாரர் நிவாரணம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.