அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால், சிஏஏ நடைமுறைக்கு வந்திருக்காது – கேஎஸ் அழகிரி

KS Alagiri has criticized the AIADMK for saying that it would urge the central government to withdraw the CAA.

சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசியிடம் வலியுறுத்துவோம் என அதிமுக கூறுவது பொய்யானது என கேஎஸ் அழகிரி விமர்ச்சித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, 26 தலைப்புகளின் கீழ் காங்கிரேஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில், மதுவிலக்கு, ஆவணப் படுகொலை, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், நீட் தேர்வு ரத்து, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கேஎஸ் அழகிரி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் தற்போது நடைமுறைக்கு வந்து இருக்காது. ஆனால், இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசியிடம் வலியுறுத்துவோம் என அதிமுக கூறுவது பொய்யானது என விமர்ச்சித்துள்ளார்.