#BREAKING: பேரவையில் குட்கா விவகாரம்... சற்று நேரத்தில் தீர்ப்பு..!

Judgment will be given at 10.30 am in the DMK case challenging the 2nd notice of the Assembly Rights Committee.

கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர்.

இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்எல்ஏக்கள் மீது  சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்  ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முதலில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் மீண்டும் 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பேரவை உரிமை குழுவின் 2-வது நோட்டீஸை எதிர்க்கும் திமுக வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.