சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது, முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தலைமை நீதிபதி […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பப்ஜி மதனை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். பின் பப்ஜி மதன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை […]
ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் […]
நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று […]
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆலோசனைகளை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக பள்ளிகளில் இயங்கிய காலகட்டங்களில் ஏழை, எளிய மாணவர்கள் உணவை குறித்து கவலைப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வதற்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், […]
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க சேனை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தற்போதைய அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அதிமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயக்குமார் என்பவரின் வெற்றியை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அமர்வில் […]
நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில்,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றார். இதனையடுத்து, நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் […]
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரயில்வே நடைபாதைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயில்வே நடைபாதை கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு […]
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது. தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து, இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி கரு.நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு […]
ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் […]
முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி தொடர்பான ஒரு வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். தடுப்பூசி பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும் மன்சூர் அலிகான் மனு தாக்கல். சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விவேக் மரணத்தை அடுத்து பேசிய மன்சூர் […]
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை கொரோனாவின் 2-வது அலை காரணமாக வட மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை நிலவிவருகிறது. இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா அனுப்பியதாக சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனங்களை […]
கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆறு நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன..? அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் விபரம் பெற்று அறிக்கை தர தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு […]
பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உத்தரவு கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர். இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து […]
டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை இன்று பிற்பகல் தானாக முன் வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடந்தயுள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். […]
மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒற்றை தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் நிரப்ப […]
தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவு. அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதாக திமுக , டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்படுவதாக தமிழக […]
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு […]
நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலை போன்றது என்பதால் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் நீதிபதிகள் கருத்து. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 நீர்நிலைகள் காணவில்லை என பொன்தங்கவேல் என்பவர் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலை போன்றது என்பதால் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் இருந்து காக்க வேண்டியது தமிழக அரசு மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை […]
கடந்த 2019-ஆம் ஆண்டு 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது எனவும் 3 தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்தியதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 3 மையங்களில் முறைகேடுகள் நடந்தததாக தெரியவருவதால் அது குறித்து விசாரிக்க ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்தார். இந்நிலையில், 3 மையங்களில் மட்டுமல்லாமல் பல மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது என்று கூறி தனி நீதிபதி உத்தரவுக்கு […]