தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது. குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், […]
உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் மே 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தற்போது குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்கள் தயாரித்தல்,விநியோகித்தல் ஆகியவற்றுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டதை உறுதி செய்திட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருள்கள் உற்பத்தி, விற்பனைக்கு தடை செய்யப்பட்டதை உறுதி செய்ய குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளச் சந்தையில் விற்கப்படும் குட்கா பொருட்கள் விற்பனையை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான 10 பேர் கொண்ட குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]
பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உத்தரவு கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர். இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து […]
சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். உரிமை மீறல் குழுவின் இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டார். #BREAKING: பேரவையில் குட்கா விவகாரம்… சற்று நேரத்தில் தீர்ப்பு..! சட்டப் பேரவையில் குட்கா எடுத்துக்கொண்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர். இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ” குட்கா உரிமை […]
பொது இடங்களில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் என்பதால் காற்று மாசு அதிக அளவில் காணப்படும் என்பது நாம் அறிந்ததுதான். கொரோனா வைரஸின் தாக்கமும் அங்கு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அங்கு காற்று மாசும் அதிகரித்து […]
திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில் இன்று மீண்டும் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உரிமை மீறல் […]
“குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது முதலமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டமன்ற ஜனநாயகத்தை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், மாண்புமிகு […]
‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நாட்டில் […]
குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான டிஎஸ்பி மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குட்கா முறைகேடு நடைபெற்றபோது மன்னர்மன்னன் புழல் சிறையில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான மதுரை ரயில்வே காவல்துறை டிஎஸ்பி மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில் மன்னர்மன்னன் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா […]
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெரியசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட அறைகளில் 2 டன்னுக்கு மேல் பான்பராக, குட்கா உள்ளிட்ட 5 வகையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது […]
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை தொடர்பாக முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார். குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது. இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா […]