#BREAKING : ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.!

The governor has formally called on DMK leader Mukha Stalin to form a government in Tamil Nadu.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். ஆனால், இந்தப் பதவியேற்பதற்கு முன் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.

அதன்படி நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக ஸ்டாலினை சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று காலை சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை ஸ்டாலின் கோரினார்.  இந்நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அழைப்பு விடுத்தது குறித்து அவரது செயலாளர் ஆனந்தராவ் படேல் ஸ்டாலின் சந்தித்து நேரில் தெரிவித்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் தெரிவித்தார்.