வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று கனிமொழி எம்.பி. ட்வீட்.
இதுகுறித்து திமுக மகளிரணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்துறை அலகுகளுக்காக 60MLT கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், அறைகலன்கள் சர்வதேச பூங்கா, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய திட்டங்களை தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு, தூத்துக்குடி மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றி என்றும் குறிப்பிட்டார்.
unknown node