ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? – மு.க.ஸ்டாலின்

ஆட்சி - எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த  லாரியை சிறை  பிடித்த போலீசாரிடம் நாங்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் லாரி என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

unknown node

இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? என்றும் ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.