மே 01,02ம் தேதிகளில் முழு ஊரடங்கா? – அரசே முடிவெடுக்கும் – தேர்தல் அதிகாரி!!

Chief Electoral Officer Satyaprada Sagu has said that the Tamil Nadu government will take a decision regarding the entire curfew.

முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 01, 02-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்றும் தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரும் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

மே 01,02ம் தேதிகளில் முழு ஊரடங்கா? – அரசே முடிவெடுக்கும் – தேர்தல் அதிகாரி!!