இன்று முதல் இங்கே முகக்கவசம் கட்டாயம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

unknown node

இந்நிலையில்,இன்று திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

unknown node

மேலும்,வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும்,நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதைபோல்,சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் இங்கே முகக்கவசம் கட்டாயம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!