தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை […]
பொதுவாக கோயில்களில் விஐபிக்கள் தரிசனம்,முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதை,தனி மரியாதை ஆகியவை இருந்து வரும் நிலையில், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே என்றும் மாறாக மனிதனுக்கு அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அஅதில் சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது சட்டத்திற்கு எதிரானது […]
தமிழகத்தில் கோயில்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.குறிப்பாக,கோயில் விழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது,கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம்.ஆனால்,ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து,இதுதொடர்பான மனுக்களை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,மதுரை முதலைக்குளம் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. […]
காவல்நிலையங்களில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகள்: மேலும்,கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகளின்மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக காவல்துறைக்கும்,உள்துறை செயலாளருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு: பல முக்கிய குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் சாட்சியாக உள்ள நிலையில்,அவை வேலை செய்யவில்லை என்ற பதிலே […]
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு […]
மதுரை:ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.ஏனெனில்,யூடியூப்பை பார்த்து துப்பாக்கி,வெடிகுண்டு தயாரிப்பது,கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர்.எனவே,அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,தவறான வீடியோக்கள் […]
சென்னை:உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜனவரி 3 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி மூலமான வழக்குகள் விசாரணை […]
டெல்லி:விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முந்தைய அரசு அரசாணை வெளியிட்டது.இதனை எதிர்த்து, விவசாயிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.ஆனால்,இந்த உத்தரவை […]
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்தானது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க அரசு அளித்தது. ஆனால்,வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த […]
வாகனங்களில் தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசியல் சார்ந்த படங்களை 60 நாட்களில் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும்,வாகனங்களில் கட்சி கொடிகள்,கட்சி தலைவர்களின் படங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும்,தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் உயர்நீதிமன்ற […]