அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... தோல்வி பயம் வந்துவிட்டது – எச். ராஜா, பாஜக

H. Raja has said that the DMK is trying to tamper with the voting machine for fear of defeat.

தோல்வி பயத்தால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்ச்சிப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பகுத்தறிவுவாதி நாங்கெல்லாம் பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடிய கூட்டம் எதைக் கண்டாலும் பயப்படுகிறார்கள். ஏற்கனவே, இந்த வாக்கு இயந்திரம் ஒன்றுக்கு ஒன்று எந்த தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா? எதுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்துவிட்ட காரணத்தால், அதற்கு இவர்கள் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்துவிட்டார்கள் என கூறுகின்றனர் என விமர்சித்துள்ளார்.