கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Health Minister Ma Subramaniam has said that there is enough oxygen reserve to deal with the third wave of corona.

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் குறைந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் விரைவில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கொரோனா மூன்றாம் அலையில் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிலையில் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் தற்போது 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும், மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.