#BREAKING: எடப்பாடி தொகுதியில் ஹாட்ரிக்.., 5-வது முறையாக ஈபிஎஸ் வெற்றி..!

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் ஈபிஎஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்த நிலையில்,  ஈபிஎஸ்  1,60, 730 வாக்குகளும், திமுக வேட்பாளர்  சம்பத்குமார் 87, 874 வாக்குகள் பெற்றனர். இறுதியாக திமுக வேட்பாளர் சம்பத்குமார் விட 75,856 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டார். 6 முறை எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிட்டு 4 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் பெற்று இருந்தார். 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 2006, 1996 ஆகிய தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தார்.

1989-ல் எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 7-வது முறையாக எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு 5-வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

1977 முதல் அதிமுக, பாமகவே மாறி மாறி எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.