#ElectionNews: 20 தொகுதிகள் அல்ல., 234 தொகுதிகளும் பாஜக தொகுதிகள் தான் – கேஎஸ் அழகிரி

KS Alagiri has said that Tamil Nadu will rule Tamil Nadu if it votes for the alliance led by MK Stalin.

முக.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை தமிழகம் ஆளும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டும் என்றால், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, முக.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், தமிழகத்தை தமிழகம் ஆளும், முக ஸ்டாலின் ஆளுவார். இதற்கு கூட்டணி கட்சிகள் துணை நிற்கும் என கூறினார்.

அப்படி இல்லையென்று சொன்னால் தமிழகத்தை மத்திய பாரதிய ஜனதா கட்சி தான் ஆளும், அதிமுகவால் ஆள முடியாது என விமர்ச்சித்துள்ளார். மேலும், ஒரு சிலர் சொல்லுகிறார்கள், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது என்று, அது தவறு. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் பாஜகவின் தொகுதிகள் தான் என்று தெரிவித்துள்ளார்.