#ElectionBreaking: புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.!

The Puducherry Assembly has signed a constituency allocation agreement with the Congress-led parties for the elections.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனிடையே, இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக – அதிமுக கூட்டணியில், வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளிலும், பாஜக – அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.