#ElectionBreaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – கே.பாலகிருஷ்ணன்

Publication of the list of candidates for the 6 constituencies of the Marxist Communist Party contesting the Assembly elections.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி, திருப்பரங்குன்றம் – எஸ்.கே.பொன்னுத்தாய், கீழ்வேளூர் – நாகை மாலி, கோவில்பட்டி – சீனிவாசன், கந்தர்வகோட்டை – சின்னதுரை, அரூர் – குமார், திண்டுக்கல் – எம்.பாண்டி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

unknown node