#ElectionBreaking: திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவிப்பு.!

mukkulathor pulipadai leader Karunas has announced that he will withdraw his support for the DMK.

திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்பின் வரும் சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

இதனிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் அளித்திருந்தார். இந்த நிலையில், திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

திமுகவுக்கு ஆதரவு மற்றும் தொகுதிகள் கேட்டு தந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை வாபஸ் பெற்றுள்ளது. நேற்று தொகுதி கொடுப்பதாக சொல்லியதாகவும், இன்று இல்லையென கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் வாபஸ் பெற்றதாக தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#ElectionBreaking: திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவிப்பு.!