#ElectionBreaking: த.மா.கா.வில் இருந்து விலகுவதாக கோவை தங்கம் அறிவிப்பு.!

Former Tamil Nadu Congress MLA Kovai Thangam has resigned from the Congress party, announcing that he will contest as an independent.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம், சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வால்பாறை சட்டசபை தொகுதியை பெற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவை தங்கம் இத்தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதிமுக அந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸுக்கு வழங்கவில்லை. வால்பாறை தொகுதியில் அமுல்கந்தசாமி போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. இதில் அதிருப்தி அடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கோவை தங்கம் அறிவித்துள்ளார். வால்பாறை தொகுதியில் கோவை தங்கம் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். வால்பாறை தொகுதியை த.மா.கா.வுக்கு ஒதுக்க அதிமுக மறுத்ததை தொடர்ந்து, அத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.